ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின் தமிழக மக்களிடையே ஒரு விதமான மாற்றம் ஏற்பட்டு, பெப்சி, கோக் உள்ளிட்டஅயல்நாட்டு குளிர்பானங்களை குடிப்பதை ஒருசாரர் தவிர்த்து வருகிறார்கள்.
இதனால், விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ள கோக், பெப்சி நிறுவனம் ஜூலை மாதத்துக்கு பின் இன்னும் மிகப்பெரிய சரிவை நோக்கி செல்ல இருக்கிறது.
மத்திய அரசு ஜூலை முதல் நடைமுறைப்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) வரியில் குளிர்பானங்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம்வரியும், கூடுதல் வரியாக 12சதவீதம் என 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், கோக், பெப்சி, உள்ளிட்ட வௌிநாட்டு குளிர்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் என அனைத்தின் விலையும் 5 முதல் 10 சதவீதம் விலை அதிகரிக்கும்.
தற்போது 200மில்லி, பெப்சி ரூ. 20க்கு நாம் வாங்கி வருகிறோம். ஜூலை மாதத்துக்குபின், இதன் விலை 25 முதல் ரூ.30 வரை உயர வாய்ப்புள்ளது.
தற்போது, அயல்நாட்டு நிறுவனங்களான பெப்சி, கோக் போன்றவற்றின் தயாரிப்புகளுக்கு 32 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இனி ஜூலை மாதத்துக்கு பின் 40 சதவீதமாக அதிகரிக்கும்.
இது குறித்து மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இனிமேல் ஜூலை மாதத்துக்கு பின் குளிர்பானங்களான பெப்சி, கோக், மிரண்டா உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக அதிகரிக்கும், மக்களிடத்தில் படிப்படியாக தேவை குறையும்.
இந்நிலையில், மத்தியஅரசின் ஜி.எஸ்.டி. வரி குறித்து பெப்சி, கோக் நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கும் இந்திய குளிர்பானங்கள் அமைப்பு கடும் வேதனையும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன.
இந்த திடீர் வரி உயர்வால், வாடிக்கையாளர்கள் இழப்பும், வருவாய் இழப்பையும் சந்திக்க வேண்டியது இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
http://kaalaimalar.in/gst-indirectly-ban-drinks-from-other-countries/