குபலியை பார்த்து வாயை பிளந்து கொண்டிருக்கும் தமிழனுக்கு அடுத்த அடியை மிக பலமாகவே கொடுத்திருக்கிறது ஆளும் அரசு.
ஒரு இனத்தின் வரலாற்றை அழித்தால் தான் அந்த இனத்தை எளிதில் அழிக்க முடியும். அந்த விதத்தில் தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியை அழிப்பதில் மிக கவனமாக இருக்கும் பாஜக அரசு.
கீழடியில் தமிழ் மொழியின் அடையாளங்கள் மட்டுமே உள்ளது என்று தெளிவாக சொன்ன ஆராட்சியாளர் அமர்நாத் அவர்களை பணியிட மாற்றம் செய்துவிட்டு அங்கு சமஸ்கிருத சுவடுகள் இருந்ததாக திரித்து வரலாற்றை எழுதியுள்ளது.
மேலும் சமஸ்கிருதம் இருந்ததற்கான எந்த சுவடும் இல்லாத பட்சத்தில்,
அங்கு சமஸ்கிருத மொழி முக்கிய மொழியாகவும் தமிழ் வட்டார மொழியாகவும் இருந்தது என அப்பட்டமான கேவலமான பொய்யய் ஆளும் மத்திய பாஜக அரசு திணித்துள்ளது.
இதற்கு எதிராக போராடிய மக்கள் இயக்கங்களை பாஜக குண்டர்கள் மிகவும் கொடூரமாக தாக்கினார்கள்.
இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்தின் எந்த மூலையிலும் தன் இனத்தை தாக்குபவனுக்கு கொடி பிடித்து பாதுகாப்பு கொடுக்கும் ஒரு இடம் இருக்குமென்றால் அது தமிழ்நாடாகத்தான் இருக்கும்.
தமிழ் மொழி சிதைக்கப்பட்டது. தமிழ் இனம் அழிக்கப்பட்டது. தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டது. தமிழர் உடைமைகள் பறிக்கப்பட்டது
தற்போது உலகின் மூத்த குடியான தமிழர் வரலாறு அழிக்கப்படுகிறது.
http://kaalaimalar.net/bjp-tamil-killed/