செவ்வாய், 16 மே, 2017

ரொம்ப நாள் வெடிக்கும் வெடிக்கும் என்று பில்டப் கொடுக்கப்பட்ட குண்டு, ஒரு நமத்துப்போன பொட்டுவெடி தான் ரஜினி !!

அதா வருது இதா வருது என்று அசால்ட்டா 22 ஆண்டுகளை ஓடிவிட்டார் பெரிய மனுசர்.
உடனே ரஜினி அரசியலில் குதித்திருக்க வேண்டுமே… ஏன் இன்னும் தாமதம் செய்கிறார்? அட, அவராவது வர்றதாவது… சும்மா பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறாருப்பா… சினிமாவை விட்டு அவர் வரமாட்டார்… என்ற விமர்சனங்கள் இப்போது வரை தொடர்கின்றன.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஓரளவு வெளிப்படையாக அரசியல் பேசியிருப்பது இந்த முறைதான். அதுவும் தனது ரசிகர்களின் அரசியல் பதவி ஆசை, பணம் சம்பாதிக்கத் துடிப்பது போன்றவற்றை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது இதுவே முதல் முறை.
“நான் ஒருவேளை பொறுப்புக்கு வந்தால், நிச்சயம் பணம், பதவி ஆசை கொண்டவர்களுக்கு இடமில்லை.
அவர்களை உள்ளே நுழையக்கூட அனுமதிக்க மாட்டேன்,” என்று அவர் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் முதல் முறையாக.
இதுதான் அரசியல் களத்தை அதிரவைத்துள்ளது. நான் அரசியலுக்கு வரவேண்டுமா என்பதை ஆண்டவன் தீர்மானிப்பான் என்பதுதான் வழக்கமான பேச்சு.
ஆனால் ரசிகர்களுக்கான எச்சரிக்கை, தனது அரசியல் வாழ்க்கையில் ஊழல் தலைவர்களுக்கு இடமில்லை என்பதைச் சொல்லும் விதமாக உள்ளதாக கருத்துத் தெரிவிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
“ரஜினி மிகப் பெரிய அரசியல்வாதி. ஒரு தேர்ந்த தலைவருக்கான முதிர்ச்சியும் பக்குவமும் இன்றைய அவரது பேச்சில் வெளிப்பட்டது.
அவர் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ… ‘ஏன் இந்த மனிதர் வரக்கூடாது.. இன்னும் என்ன தயக்கம் இவருக்கு?’ என்ற கேள்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது,” என்கிறார், ரஜினியை தமாகா காலத்திலிருந்து உற்று நோக்கி வரும் ஒரு அரசியல் விமர்சகர்.
ஆனால் பரவாயில்லை.. ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்..
ரொம்ப நாள் வெடிக்கும் வெடிக்கும் என்று பில்டப் கொடுக்கப்பட்ட குண்டு ஒரு நமத்துப்போன பொட்டுவெடி என்பது அம்பலமாவதற்காகவாவது நீங்க அரசியலுக்கு வரணும் மிஸ்டர் ரஜினி.
http://kaalaimalar.in/rajini-will-come-to-political-platform/

Related Posts: