தூத்துக்குடி மாவட்டம் அய்யனார் ஊற்று என்ற கிராமமே புற்றுநோய்க்கு இரையாகிக் கொண்டிருக்கிறது.
அய்யனார் ஊற்று கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். வாய் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் என புற்றுநோய் அந்த கிராம மக்களை கொன்று குவிக்கிறது.
அதிலும் குறிப்பாக வாய் புற்றுநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
அதிலும் குறிப்பாக வாய் புற்றுநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
அய்யனார் ஊற்று கிராம மக்களின் புற்றுநோய் பாதிப்பிற்கு அந்த கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீர் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. நிலத்தடி நீரையே(ஊற்று நீர்) அந்த கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்துவதுதான் புற்றுநோய் பாதிப்பிற்குக் காரணம் என கருதப்படுகிறது.
குடிநீர் பாதிப்பால்தான் புற்றுநோய் ஏற்படுகிறதா என்பதை அறிவதற்காக அய்யனார் ஊற்று கிராமத்தினர் பயன்படுத்தும் குடிநீரை ஆய்வு செய்வதற்காக வந்த மருத்துவர் குழு, அந்த நீர் மாதிரியை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை அந்த கிராமத்திற்கு வரவில்லை.
இதனால் புற்றுநோய்க்கு என்ன காரணம் என தெரியாமல் அந்த கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இன்றுவரை அந்த கிராமத்தில் வீட்டில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கிராமமே புற்றுநோய்க்கு இரையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை அதற்கான காரணத்தை ஆராய்ந்து மக்களை நோயிலிருந்து விடுவிக்க அரசோ மாவட்ட நிர்வாகமோ சுகாதாரத் துறையோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
இனியாவது அய்யனார் ஊற்று கிராம மக்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா? என்பது அந்த கிராம மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு
http://kaalaimalar.in/cancer-affected-village-in-tutucorin-district/