ஓய்வு பெறும் அரசு அதிகாரிகள் பலர், முதுமை காலத்திலும் பணம் சம்பாதிக்கவும், பேர், புகழோடு இருக்கவும் அரசியலுக்கு வந்துள்ளனர்.
பலரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அந்த வரிசையில் தற்போது ரஜினி காந்தும் களத்தில் இறங்கியுள்ளார்.
தமிழக மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் வந்த போது, அமைதியாக தொழிலை பார்த்துக் கொண்டிருந்தவர், இப்போது காலம் போன கடைசியில் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யப் போகிறாராம்.
அவர் நடித்தும் பள்ளியின் ஊழியர்கள் சம்பளம் ஆறுமாதம் தரவில்லை என போராட்டம் நடத்திய நிலையில், இவர் தமிழகத்தையே நிர்வகிக்க போகிறாராம் இந்த முதுமையில்…
இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் சிலர், சகாயம் தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினர்.
இதற்கு சவுக்கடி பதில் அளித்துள்ளார் சகாயம். ” தமிழ் சமூகம் உருவாக அரசியலுக்கு அப்பாற்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறேன். ரஜினிக்கு நான் ஆதரவு அளித்ததாக வரும் செய்தி உண்மையில்லை” என கூறியுள்ளார்.
இதன்மூலம் தமிழ் சமூகத்தை உருவாக்க மராத்தியரான ரஜினியால் முடியாது என சகாயம் விளக்கியுள்ளார்.