சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கிற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வராக (காங்கிரஸ்) இருப்பவர், வீரபத்ர சிங். இவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக,
தொடர்ந்து வந்த புகார்களைகொண்டு வீரபத்ரசிங் வீடுகளில், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகி கைது செய்வதில் இருந்து இடைக்கால தடை பெற்ற வீரபத்ரசிங், அவரது மனைவி ஆகியோர்,
தங்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ரத்து செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
ஆனால், இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேசமயம், வீரபத்ரசிங் மற்றும் அவரது மனைவி பிரதீபா சிங் மீது சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்த குற்றப்பத்திரிகையை பரிசீலனை செய்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி விரேந்தர் குமார் கோயல்,
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு மே 22-ம் தேதி ஆஜராகும்படி வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவி பிரதிபா சிங் உள்ளிட்ட 9 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்
http://kaalaimalar.net/m-pradesh-cm-went-to-investigation-on-bribe/