மாவோயிஸ்டுகள்நமது துணை ராணுவ வீரர்கள் 24 பேரை கொன்றபோது, நாமெல்லாம் கொதித்தெழுந்தோம். இதனை செய்தவர்களை சும்மா விடக்கூடாது என கூறினோம். விடக்கூடாது தான்.
ஆனால் இவை ஏன் நடக்கின்றன என்பதை சிந்தித்தோமா… அந்த தாக்குதல் நடந்த சில நாட்களில் மாவோயிஸ்டுகள் ஒரு ஆடியோவை வெளியிட்டனர். அதில் துணை ராணுவம் மீது பகீர் குற்றச்சாட்டுக்கள் இருந்தன.
இவையெல்லாம் உண்மையா என்று நாம் யோசிக்கும் முன்பே, ஒரு பெண் ஆம் உண்மை தான் என்றார். அந்த பெண் சாதரணமானவள் அல்ல. அவளும் ஒரு அரசு ஊழியர்.
சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சிறைத்துறை அதிகாரியான அந்த பெண்ணின் பெயர் வர்ஷா டாங்ரி.
இவர் கூறியது கடும் அதிர்ச்சியளிக்கிறது. 15, 16 வயதுள்ள பழங்குடியின சிறுமிகளை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று நிர்வணமாக்கி அவர்களின் மார்பகங்களில் மின்சாரத்தை பாய்ச்சுகின்றனராம்.
இதனை தான் நேரில் பார்த்ததாக அவர் கூறுகிறார். பழங்குடியின பகுதிகளில் சோதனையின் போது, பெண்களின் மார்பகங்களை தொட்டு பார்ப்பதையும் போலீசாரும், துணைராணுவமும் வழக்கமாக வைத்துள்ளனராம்.
இதனால் மாவோயிஸ்டுகளை வெறுக்கும் சாதாரண பழங்குடியினர் கூட பாதுகாப்பு படையை எதிர்க்கும் முடிவிற்கு வருகிறார்கள் என அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார்.
அந்த பெண் அதிகாரி முகநூலில் இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார். அரசு சும்மா விடுமா? நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் தனது பதிவை நீக்கிவிட்டார்