தமிழகத்தில் இருக்கும் அதிமுகவின் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும், என்று தமிழிசை சூசகமாக தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இது போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கினால் தான் குற்றங்கள் குறையும்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி மிக பலவீனமாக இருக்கிறது. அவர்களின் நிர்வாக திறமையின்மையால் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.
தமிழகம் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறது. மீண்டும் ஆண்டுகொண்டிருக்கும் கட்சியும், ஆண்ட கட்சியும் வரக்கூடாது என்று மக்கள் விரும்புகிறார்கள்.
தற்போது உள்ள சூழலில் மக்கள் விரும்பும் மாற்றத்தை பாஜகவால் மட்டுமே தர முடியும். பாஜகவை வலுப்படுத்தும் திட்டத்துடன் தலைவர் அமித்ஷா வரும் 11-ந்தேதி தமிழகத்திற்கு வர உள்ளார். இவ்வாறு கூறினார்.
http://kaalaimalar.net/tn-government-any-time-will-dissolve/