ஞாயிறு, 7 மே, 2017

இன்று தமிழை உச்சரிக்கத் தெரியாமல், தடுமாறிக் கொண்டிருக்கும் ஏராளமான தமிழர்களுக்கே தெரியாத, மறக்கடிக்கப்பட்ட உண்மை..

குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும், கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும்.
குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு.
தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்தக் குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினரென எழுதியுள்ளனர்.
இன்று உலக அகழ்வாராய்ச்சியாளர்களால் “லெமுரியா” (Lemuria) என்றழைக்கப்படும் கண்டம் தான் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்புக் குமரிக் கண்டம் என்ற பெயருடன் மிக கம்பீரமாய் இருந்தது.
முச்சங்கம் வளர்ந்த இடமும் அதுதான், தமிழிசைப் பாக்களும், இயல், இசை, நாடகமும் என நாகரீகம், கலைகள், வீரம் அனைத்தும் விளைந்த இடம், குமரிக் கண்டம். தமிழ் வெறும் மொழி அல்ல பெரும் வரலாறு.
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
ஏறத்தாழ இருபதாயிரம் முதல் நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன் அழிந்ததாகக் கூறப்படும் கண்டம், குமரிக் கண்டம். இங்கு தான் பல உயிரினங்கள் தோன்றின. ஆதி மனிதர்களும் தோன்றிய இடமும் இது தான்.
மனிதன் இவ்வாறு தான் இருக்க வேண்டும், குடும்பத்திற்கு என்று ஓர் இலக்கணம், உறவுகள், பந்தம், பாசம் என நாகரீக வளர்ச்சிக் கண்டெடுக்கப்பட்ட இடமும் குமரிக் கண்டம் தான்.
அனைத்து மிருகங்களைப் போல வினோத ஓசைகளை எழுப்பியவாறுத் திரிந்துக் கொண்டிருந்த சமயத்தில் மனிதனுக்கு என்று ஓர் மொழிப் பிறந்த இடம் தான் குமரிக் கண்டம்.
ஆதி மனிதன், தான் தோன்றிய இடமான குமரி கண்டத்தில் பேசிய மொழி “தமிழ்”. உலகிலேயே பழமையான மொழி மட்டுமல்லாமல், தொன்மை வாய்ந்த மொழியும் தமிழ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முச்சங்கம் வளர்க்கப்பட்ட இடம் தேனிக்கு அருகாமையில் இருக்கும் மதுரை அல்ல. குமரிக் கண்டத்தின் மிக முக்கியமான தலைநகராக திகழ்ந்துக் கொண்டிருந்த மாபெரும் நகர் “மதுரை”. அந்த மதுரை மாநகரத்தில் தான் தமிழ் முச்சங்கம் வளர்த்து வளர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இடது பக்கம் ஆப்ரிக்கா, மற்றும் வலது புறம் ஆஸ்திரேலியா, மேல்புறம் ஆசிய போன்ற கண்டங்களை இணைத்து வைத்திருந்த கண்டம் தான் குமரிக் கண்டம்.
எவரெஸ்ட் சிகரம் எல்லாம், குமரிக் கண்டத்தில் இருந்த மலைகளுக்கு முன் வெறும் குன்று தான் எனவும்.
எவரெஸ்ட் போல பத்து மடங்கு பெரிய மலைகள், வானுயர் அருவிகள், ஆறுகள் என கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டு இருந்த கண்டம் குமரிக் கண்டம்.
கட்டிடம், மருத்துவம், புவியியல், வானியல் என்று பல துறைகளிலும் உயர் தொழில்நுட்பத்தை அப்போது குமரிக் கண்டத்தில் வாழ்ந்தவர்கள் கையாண்டுள்ளனர்.
அடுத்தடுத்து ஏற்பட்ட பேரழிவுகளினால் இந்திய பெருங்கடலில் மூழ்கிப் போனது குமரிக் கண்டம்.
பேரழிவுகளுக்கு பின் மூன்று திசைகளிலும் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பிரிந்து உலகம் முழுக்க சென்றிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கின்றன.
இதற்கு, தெற்கு-ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் உடல் கூற்றுகள் மற்றும் எலும்பு கூடு அமைப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பது ஒரு சான்றாக இருக்கிறது.
கடந்த பத்து வருடங்களாக பல ஆய்வுகள் குமரிக் கண்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.
இவற்றில் பெரும்பாலான ஆய்வறிக்கைகள், மூழ்கிய நிலையில் உள்ள கட்டிடங்களில் வடிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் தமிழோடு ஒத்துப்போவதாக ஊர்ஜிதம் செய்துள்ளார்கள்.
இன்று தமிழை உச்சரிக்கத் தெரியாமல், தடுமாறிக் கொண்டிருக்கும் ஏராளமான தமிழர்களுக்கே தெரியாத, மறக்கடிக்கப்பட்ட உண்மை..!
http://kaalaimalar.net/hided-face-of-tamilan/

Related Posts: