சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்பட 21 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன் ? எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோவிலின் மேலாளராகப் பணியாற்றி வந்த சங்கரராமன் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தமிழகத்தில் நடைபெற்றால் உரிய முறையில் நடக்காது எனக் கூறிப் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பளித்த புதுச்சேரி மாவட்ட நீதிமன்றம் ஜெயேந்திரர் உட்படக் குற்றஞ்சாட்டப்பட்ட 21 பேரையும் விடுதலை செய்தது. இந்நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுவிக்க மாவட்ட நீதிபதியிடம் ஜெயேந்திரர் பேரம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியானது.
இந்தத் தொலைபேசி உரையாடல் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி அறிக்கை அளித்திருந்தனர். அதன் அடிப்படையில், ஜெயேந்திரருடன் பேரம் பேசியதாகப் புகாருக்கு ஆளான புதுச்சேரி மாவட்ட நீதிபதி ராமசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் சைபர் கிரைம் அறிக்கைப்படி ஜெயேந்திரருடன் பேரம் பேசியவர் பவானி மாவட்ட நீதிபதி ராஜசேகர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பவானி மாவட்ட நீதிபதி ராஜசேகர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் கொடுத்த ஜெயேந்திரர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துப் புதுச்சேரி அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், சங்கரராமனைக் கொலைசெய்தவர்கள் யார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக நாளை பதிலளிக்குமாறு புதுச்சேரி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.