பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்க்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதில் மத்திய அரசு தலையிட முடியாது என மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யான் தெரிவித்துள்ளார்.
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே உள்ள தடுப்பணையின் உயர்த்துவதையும், புதிய அணை கட்டுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் வேணுகோபால் கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி மக்களவையில் வலியுறுத்தினார். இதற்கு மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யான் கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.
பாலாறு அணை தொடர்பாகத் தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீர்ப்புக்காக மத்திய அரசு காத்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் கடிதத்தில் அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யான் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து 2011ஆம் ஆண்டு இரு மாநிலங்களுக்கு இடையில் பேச்சு நடைபெற்றதாகவும், ஆனால் இரு மாநில அரசுகளின் பிடிவாதம் காரணமாக அந்தப் பேச்சில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் கடிதத்தில் அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யான் குறிப்பிட்டுள்ளார்.