ஞாயிறு, 7 மே, 2017

அக்னி வெயில் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் குற்றால அருவி! May 07, 2017




மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால், குற்றால அருவியல் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. 

தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. 

இதைத் தொடர்ந்து, ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவியிலும் தண்ணீர் வர துவங்கியுள்ளதால், அங்கும் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்தனர். 

அக்னி வெயில் சுட்டெரிக்கும் நிலையில், அருவியில் தண்ணீர் வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளதாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனர். 

Related Posts: