திங்கள், 8 மே, 2017

"அகிலேஷ் யாதவை உத்தரபிரதேச முதல்வராக்கியதே நான் செய்த பெரிய தவறு" May 07, 2017



அகிலேஷ் யாதவை முதல்வராக்கியதே தான் செய்த தவறு என அவரின் தந்தையும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான  முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரியில் நிகழ்ச்சி ஒன்றில்  பேசிய அவர், உத்தரபிரதேசத்திற்கு தான் முதல்வராகியிருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார். கட்சி தற்போது மோசன நிலைக்கு மாற காரணம் காங்கிரஸ் கட்சியுடன் வைத்த கூட்டணியே என அவர் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவேண்டாம் என தான் அறிவுறுத்தியதாகவும் ஆனால் அகிலேஷ் அதை ஏற்கவில்லை என்றும் முலாயம் சிங் கூறியுள்ளார். நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததற்கு மக்களை குறைகூறாமல் சமாஜ்வாதி கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அக்கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். 

Related Posts: