கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற பெண்களிடம் உள்ளாடைகளை அவிழ்க்குமாறு தேர்வு மைய அதிரிகாரிகள் நிர்பந்தித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 103 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2, 204 தேர்வு மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். கடுமையான எதிர்ப்புக்கும் மத்தியிலும் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத சென்ற மாணவ, மாணவியர்கள் கம்மல், ஹேர்பின், கொலுசு, முழுக்கை சட்டை, ரப்பர் பேண்டுகள், தலையில் அணியும் கிளிப்புகள், பூ போன்றவைகளை அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் முழுக்கை சட்டை போட்டுக்கொண்டு தேர்வு எழுத சென்ற மாணவர்களைக்கூட, கத்திரிக்கோல் மற்றும் பிளேடுகளால் தங்களின் சட்டைகளை அரைக்கை சட்டையாக கிழித்துக்கொண்ட பின்புதான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த சோதனையால், தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சோதனை செய்பவர்களுக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டது. தேர்வுக்காக தாயாராகி வந்த பல மாணவர்களும் அதிகாரிகளின் இந்த கிடுக்குப்பிடி சோதனையால் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகினர்.
இந்நிலையில் கேரளா மாநிலம் கன்னூரில் தேர்வு எழுதவந்த மாணவிகளிடம், அதிகாரிகள் உள்ளாடைகளை அவிழ்க்கச் சொன்னதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். தேர்வு எழுத வந்த பெண்கள் கழிவறைக்கு சென்று தங்களின் உள்ளாடைகளை கழட்டிவிட்டு வந்த பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டதாக மாணவிகளின் பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தேர்வு மைய அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தேர்வு எழுத வந்த மாணவர்களை மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.