வியாழன், 11 மே, 2017

பெண்ணை கொடூரமான முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய காவல் அதிகாரி! May 11, 2017

பெண்ணை கொடூரமான முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய காவல் அதிகாரி!


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் திருட்டு புகாரில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள டொமானா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்த 28 வயது பெண் ஒருவர் நகைகளைத் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஏப்ரல் 30ம் தேதி கனசக் பகுதி காவலர்களால் கைதுசெய்யப்பட்டார்.

மே 9ம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற அவர் , கைது செய்யப்பட்டு கனசல் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த ஒருவார காலத்தில் காவலர் ராகேஷ் சர்மா என்பவரால் ஒருவாரம் தொடர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தனது பிறப்பில் பீர் பாட்டிலை திணித்தும், மிளகாய் பொடியை தூவியும் தன்னை கொடூரமான முறையில் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டினார்.

மேலும், தான் காவல் நிலையத்தில் இருந்தபோது தனக்கு உண்பதற்கு எதுவும் கொடுக்கவில்லை எனவும், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபோது சிறுநீரை பிடித்து குடிக்க சொன்னதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதோடு, நகை திருட்டு வழக்கில் தான் தவறாக கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், தன்னை பார்க்கவந்த கணவர்,குழந்தை மற்றும் மாமியார் ஆகியோரும் காவலர்களால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டை கனசக் காவல் அதிகாரி ராகேஷ் சர்மா மறுத்துள்ளார். ஜம்முகாஷ்மீர் மாநில காவல் உயர் அதிகாரி, இந்த சம்பவம் தொடர்பாக துறைசார்ந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண்மணியின் வழக்கறிஞர் விஜய் குமார், குற்றம்சாட்டப்பட்ட காவலரை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அம்மாநில ஐஜி க்கு உத்தரவிட்டுள்ளதோடு, ஐஜி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக்குழு இது தொடர்பாக விசாரணை செய்து 15 நாட்களுக்குள்ளாக அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான மருத்துவ வசதியை செய்து கொடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

டெல்லி மாணவி நிர்பயா கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் இரு நாட்களுக்கு முன்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் நிர்பயா வழக்கிற்கு இணையான ஒரு சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts: