வியாழன், 11 மே, 2017

வளிமண்டல சுழற்சியால் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு May 11, 2017




தென் மாவட்டங்களிலும், நீலகிரி மாவட்டத்திலும் அடுத்த 24மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டலத்தின் மேல்திசைக் காற்றும், கீழ்த்திசைக் காற்றும் வடதமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி வரை நிலவுவதாகவும் இதன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்துள்ளதாகத் தெரிவித்தார். 

இன்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24மணி நேரத்தில் அதிக அளவாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 13சென்டிமீட்டரும், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 12சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். 

அடுத்த 24மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென் மாவட்டங்களிலும் நீலகிரி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

Related Posts: