மேற்குதொடர்ச்சி மலை பகுதியான செண்பகத்தோப்பில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகதோப்பு வனப்பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சியால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருந்தது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக மேற்க்குதொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையால் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பயணிகளின் வருகையும் அதிகரித்தது.
அங்குவரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்களை அங்கே விட்டுச் செல்வதால், வனவிலங்குகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால் வனபகுதிக்குள் பிளாஸ்டிக் உள்ளிட்ட விலங்குகளுக்கு தீமை விளைவிக்கும் பொருள்களை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.