திங்கள், 15 மே, 2017

பாஜக மீது நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம்! May 15, 2017




தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பார் என நினைத்து டிடிவி தினகரனை கைது செய்திருப்பதாக நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். 

டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நெல்லை பாளையங்கோட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத் தமிழகத்தில் நிலவும் தலைவர்கள் பற்றாக்குறையை போக்க வந்த டிடிவி தினகரனுக்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம் உள்ளதாகக் கூறினார்.

அதிமுகவை ஒரு தமிழன் வழிநடத்துவதைப் பொறுக்காத பாஜக டிடிவி தினகரன் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக அதற்காக அதிமுகவில் துரோகம் இழைப்பவர்களை தேடி அலைந்துகொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டிய நாஞ்சில் சம்பத் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். 

கூட்டத்தில் பேசிய கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, டிடிவி தினகரன் மீதான கைது நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்தார். அரசியல் உள்நோக்கங்களுக்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் புகழேந்தி குற்றம்சாட்டினார். 

Related Posts: