வியாழன், 1 செப்டம்பர், 2016

ரூ.500-க்கு ஒருநாள் சிறை வாசம்: அரசின் புதிய திட்டம்


சிறைவாசம் குறித்த அனுபவத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கும் வகையில் ரூ.500-க்கு ஒருநாள் சிறைவாசத்தினை அனுபவிக்கும்வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தின் சங்காரெட்டி பகுதியில் உள்ள ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிறையில்தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அருங்காட்சியமாக மாற்றப்பட உள்ள இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் எல்லோரும் மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சிறைவாச அனுபவத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கும் வகையில் தெலங்கானா மாநில அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ.500 செலுத்தும் ஒவ்வொருவரும் இந்த சிறையில் ஒருநாள் சிறைவாசம் அனுபவிக்கலாம். அந்த குறிப்பிட்ட நாளில் சிறைக்கைதிகள் போலவே கைதி உடையில் அவர் நடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.