வியாழன், 18 மே, 2017

பார்ட் டைம் பைலட்டாக வேலை செய்யும் மன்னர்! May 18, 2017




20 ஆண்டுகளாக விமானத்தில் பைலட்டாக வேலை பார்த்துக்கொண்டே ஆட்சி பொறுப்பை நடத்திவருவதாக நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

நீர் நாடு என்று போற்றப்படும் நெதர்லாந்து பசுமை நிறைந்த, அழகான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு நாடு. மன்னராட்சி இடம் பெறும் இந்நாட்டில் நாடாளுமன்ற முறைப்படியே ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது.  மன்னர் நாட்டின் தலைவராக இருந்த போதினும் அதிகாரங்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரிடம் இருக்கும்.இந்நாட்டில் தற்போது மன்னராக இருப்பவர் வில்லியம் அலெக்சாண்டர். ராணியாக இருந்த 79 வயதுடைய பீட்ரிக்ஸ் பதவி விலகியதையடுத்து வாரிசுரிமை அடிப்படையில் வில்லியம்ஸ், நாட்டின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகாலமாக தான் விமானியாக பணிபுரிந்து வருவதை சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். மாதத்தில் இரண்டு நாட்களுக்கு விமானியாக பணிபுரியம் வில்லியம்ஸ், ஆரம்பத்தில் துணை விமானியாக பணிபுரிந்து படிப்படியாக விமானத்தை இயக்க கற்றுக்கொண்டுள்ளார். 
தன்னுடைய பொழுதுபோக்கிற்காக இப்படி பகுதி நேர வேலை செய்துவரும் வில்லியம்ஸ், பணிக்கு செல்லும்போது தான் ஒரு மன்னர் என்பதையே மறுந்துவிடுவதாக தெரிவித்தார். ஆட்சி பொறுப்பில் தனக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பயனிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அனைத்தையும் மறந்துவிட்டு பொறுப்புடன் தன்னுடைய வேலையை தொடர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், விமானநிலையத்திற்கு செல்லும்போது சீருடையுடன் செல்வதால் வெகுசிலர் மட்டுமே எப்போதுவது தன்னை அடையாளம் கண்டுகொள்வதாகவும், தனக்கு அது பெரிய பிரச்சனையாக இருப்பதில்லை எனவும் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

Related Posts: