சனி, 20 மே, 2017

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய மாணவிக்கு நேர்ந்த அவலம்! May 20, 2017

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய மாணவிக்கு நேர்ந்த அவலம்!


திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன்னை, நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக துணை ஜெயிலர் மீது, பாதிக்கப்பட்ட மாணவி குற்றம் சாட்டியுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்தவர் வளர்மதி. பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த இவரை கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி கைது செய்த போலீசார், திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.



சிறையில் இருந்து பிணையில் வெளிவந்துள்ள மாணவி வளர்மதி, தான் சிறையில் இருந்தபோது, தன்னை நிர்வாணப்படுத்தி, சித்ரவதை செய்ததாக துணை ஜெயிலர் மீது குற்றம் சாட்டியுள்ளார். 

Related Posts: