சனி, 20 மே, 2017

கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு! May 20, 2017

கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு!



கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சரக்கு மற்றும் சேவை வரிகளின் அடிப்படை அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு துறைகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அருண் ஜெட்லி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ஜிஎஸ்டி.,யின் கீழ் கேளிக்கை வரிகளும் சேவை வரியுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து விதமான சேவைகளுக்கும் 5%, 12%, 18%, 28%  என 4 வகையாக வரி நிர்ணயம் செய்யப்பட்டு வகைபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனினும், நேற்றைய கூட்டத்தில் தங்கத்திற்கான ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்படவில்லை. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: