சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 220 மான்களும், 8 கறுப்பு நிற இன மான்களும் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. இதில் சில மான்களின் வயிற்றில் ஆணுறைகள் இருந்தது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டனி கிளெமண்ட் ரூபின் என்பவர் ஐ.ஐ.டி. வளாகத்தில் பெருகி வரும் விலங்குகளின் இறப்புக் குறித்து விளக்கம் அளிக்குமாறு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவிற்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 2014இல் இருந்து 2016 வரைக்கும் எடுத்த கணக்கெடுப்பின் படி, ஐ.ஐ.டி. வளாகத்தில் 220 மான்களும் 8 கறுப்பு நிற மான்களும் இறந்ததாகப் பதிவாகியுள்ளது.
இதில் கறுப்பு நிற மான் இனம், 1972ஆம் ஆண்டு வனவிலங்கு சட்டத்தின்படி, அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. விலங்குகளின் இறப்புக்கு விபத்துக்களை காரணமாகக் காட்டிய ஐ.ஐ.டி. நிர்வாகம், செப்டம்பர் மாதம் 20ம் தேதி, 2014ம் ஆண்டு நடந்த ஒரே ஒரு விபத்தைப் பற்றி மட்டுமே கூறிய கல்லூரி முதல்வர் துல்லியமான ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. அன்று நடந்த விபத்தில் சிக்கிய மான் உயிரோடு உள்ளதா இல்லை ஏதேனும் காயங்கள் மட்டும்தான் ஏற்பட்டதா என்ற விளக்கம் கூட தெளிவாக குறிப்பிடபடவில்லை.
236 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைந்துள்ள ஐ.ஐ.டி வளாகத்தில், வன விலங்குகள் இறப்பதற்கு மேலும் பல காரணங்கள் இருப்பதாக ரூபின் தெரிவித்துள்ளார். பல காட்டுமிருகங்களுக்கும் வாழ்விடமாக அமைந்திருந்த ஐ.ஐ.டி. வளாகம், தற்போது விரைவாக அந்தச் சூழலை இழந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.ஐ.டி. வளாகத்தை தூய்மையான விதத்தில் பராமரிக்காததால், அங்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை வன விலங்குகள் உண்ணுவதால் அவை இறக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இவ்வாறாக வனப்பகுதியாக உள்ள இடத்தை மாசுப்படுத்துவது திடக்கழிவு மேலாண்மை சட்டம் 2016ஐ மீறலாகவும் பார்க்கப்படுகிறது. வளாகத்தினுள், மறுசுழற்ச்சி செய்யப்பட முடியாத பிளாஸ்டிக்கை தடை செய்யவும், பாலிதீன் கவர்களின் உபயோகத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரூபின் வலியுறுத்தியுள்ளார்.
கல்லூரியில் இருந்து வெளியாகும் கழிவுகள் சரியான முறையில் அப்புறப்படுத்தப்படவில்லை என்பதால் அதிகப் பாதிப்பு ஏற்படுவதாகவும், இறந்த விலங்குகளில் 22 மான்கள், மாணவர்களின் வருடாந்திரக் கொண்டாட்டங்களான சாரங் மற்றும் ஷாஸ்திராவின் போது நடந்துள்ளது. மிகுதியான சத்தம் விலங்குகளுக்கு அழுத்தத்தையும், உடல்நலக்குறைவையும் ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். 2011ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் மோதி அடுத்தடுத்து மூன்று மான்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இது விழாக்களின் போது அதிகரிக்கும் போக்குவரத்தினாலும், அதிகமான ஒலி மாசுபாட்டாலும், இது போன்ற இறப்புகள் நிகழ்வதாகக் கருதுவதாகவும் ரூபின் தெரிவித்துள்ளார். இறந்த மான்களை பிரேத பரிசோதனை செய்யும்போது சில மான்களின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகளும், ஆணுறைகளும், சேனிட்டரி நேப்கின்களும் இருந்தது தெரியவந்துள்ளது.
கழிவுகளை அப்புறப்படுத்தும் முறையை நெறிப்படுத்தி, சிறப்பு விழாக்களை வேறு இடங்களில் மாற்றி நடத்தினால் விலங்குகளின் நலவாழ்வுக்கு மிகவும் உறுதுணையாக அமையும் எனத் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் ரூபின் தெரிவித்துள்ளார்.