செவ்வாய், 23 மே, 2017

மோடிக்கு கிடைத்த இரண்டு அடிமைகள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்!” : துரைமுருகன் May 23, 2017

“மோடிக்கு கிடைத்த இரண்டு அடிமைகள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்!” : துரைமுருகன்


பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த இரண்டு அடிமைகள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வுக்கு தடை விதிக்க வலியுறுத்தியும் திமுக சார்பில் மதுரை தெப்பக்குளத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ரஜினி அரசியல் பிரவேசம் என்பது மட்டுமல்ல யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம் என தெரிவித்தார். 

சட்டசபையின் வைரவிழாவில் கருணாநிதி பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிவித்த துரைமுருகன், குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு பிறகு தற்போதைய தமிழக அரசுக்கு ஒரு முடிவு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

இப்போது நடைபெறுவது ஆட்சியல்ல காட்சி எனவும், மோடிக்கு கிடைத்த இரண்டு அடிமைகள் தான் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என்றும் துரைமுருகன் விமர்சித்தார்.

Related Posts: