தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் வேலைவாய்ப்புக்காக வழங்கப்பட்ட கடிதங்கள் போலி என்று தெரியவந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ளது சிக்ஷா ஓ அனுசந்தன் பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழகத்தில் பிடெக் படித்த மாணவர்கள் 50 பேர் குர்கானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பின்னர் வேலைக்கு சேர்வதற்காக பணி நியமன ஆணையோடு சென்ற மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாணவர்கள் கொண்டுவந்த பணி நியமன ஆணை போலி என திருப்பி அனுப்பியது அந்த நிறுவனம்.
மாணவர்கள் ஆத்திரத்தில் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் பல்கலைக்கழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈருபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாணவர்கள் தரப்பில்“தங்களை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தங்களை தேர்வு செய்ததாகவும், ஆனால் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டது போலி நியமன ஆணை என்று தெரிவித்ததாகவும்” கூறப்படுகிறது.
மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்தபின் பணிநியமன ஆணை வழங்கப்பட்ட மற்ற நிறுவனங்களை சோதித்தபோது அவைகளும் போலியானவை என்று தெரிய வந்தது.
அந்த நிறுவனங்களுக்கு சற்றும் தொடர்பில்லாத மோசடியாளர்களால் மாணவர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக பல்கலைக் கழக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
கேம்பஸ் இண்டர்வியூவிற்கு ஏற்பாடு செய்த கன்சல்டன்சி நிறுவனம் ஒன்று நிறுவனங்களின் பெயரில் போலி பணிநியமன ஆணைகளை வழங்கியதாக தெரிவித்தனர்.
ஐடிஇஆர்(ITER) டீன் பிகே ஷாஹூ கூறும் போது இந்த பிரச்னை குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருடன் அலோசித்ததாகவும், வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட மாணவர்களுக்கு துணை ஆசிரியர்கள் பொறுப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூபாய்20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் மாணவர்களோடு எப்போதும் தொடர்பிலேயே இருக்கிறோம், அவர்களோடு நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று சாஹூ கூறியுள்ளார்.
இருப்பினும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டதோடு, பல்கலைக்கழகத்தின் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்த்து வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.