வெள்ளி, 30 ஜூன், 2017
பசுத் தீவிரவாதிகளால் கொல்லப்படுவதற்கு முன் எடுத்த வீடியோ
By Muckanamalaipatti 7:28 PM
பாஜக ஆளும் ஜார்கண்ட் மாநிலத்தில் வேனில் மாட்டிறைச்சி ஏற்றிச்சென்ற அலிமூதீன் என்ற அஸ்கார் அன்சாரி என்பவரை அடித்தே கொண்றுள்ளனர் பசுத் தீவிரவாதிகள்
தனியார் தோட்டத்தில் மாம்பழம் பறித்ததால் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட 8 வயது பெண்! June 30, 2017
By Muckanamalaipatti 6:01 PM
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் தனியார் தோட்டத்தில் மாம்பழம் பறித்ததால் 8 வயது பெண் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - நேபாளம் எல்லையில் அமைந்துள்ள தேண்டிக்ரி கிராமத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இப்ராஹிம் ஷஃபி என்பவரின் 8 வயது மகளான அமெருன் காடென், தந்தையுடன் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்துள்ளனர்.
தந்தையை முன்பாக வீட்டுக்கு செல்லுமாறு கூறிய சிறுமி, தந்தைக்கு தெரியாமல் அருகேயிருந்த தனியார் தோட்டத்தில் மாம்பழங்கள் பறிக்கச் சென்றுள்ளார். மகளுக்காக பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு சென்ற தந்தை, மாலையாகியும் மகள் வீட்டுக்கு வராததால் தேடத்தொடங்கியுள்ளார்.
ஊரார் தெரிவித்த தகவலின் பேரில், அருகேயிருந்த குளக்கரையில் சென்று பார்த்தபோது ரத்தகாயங்களுடன் அமெருன் காடென் சடலமாக கிடந்துள்ளார். அதிர்ச்சியில் உறைந்த இப்ராஹிம் ஷஃபி அருகே சென்று பார்த்த போது, சிறுமியின் உடல் கத்தியால் கிழிக்கப்பட்டும், மின்சாரம் செலுத்தப்பட்டும் சித்ரவதை செய்யப்பட்டது தெரியவந்தது.
மாம்பழம் பறிக்கச் சென்ற சிறுமியை தனியார் மாம்பழத்தோட்ட உரிமையாளர் சஞ்சய் மேத்தாவும், அவருடன் இருந்தவர்களும் சித்ரவதை செய்து கொன்றுள்ளதாக குற்றம்சாட்டும் இப்ராஹிம் ஷஃபி, மாம்பழத்தோட்டத்தில் ரத்தக்கரை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, சித்ரவதை செய்து கொல்லப்பட்ட அமெருன் காடென் தந்தை இப்ராஹிம் ஷஃபி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள சஞ்சய் மேத்தா மற்றும் அவரது உதவியாளர் வினோத் மேத்தாவையும் தேடி வருகின்றனர்.

பொதுமக்களின் தாக்குதலில் உயிரிழந்த திருடர்கள்! June 30, 2017
By Muckanamalaipatti 6:00 PM
பீகார் மாநிலத்தில் திருடர்கள் இருவரைப் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கியதை அடுத்து, அவர்கள் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் ரோத்தாஸ் பகுதியில் நேற்றிரவு ஒரு வீட்டில் புகுந்து, இரண்டு திருடர்கள் கொள்ளையடித்தனர். தூங்கிக் கொண்டிருந்த அவ்வீட்டை சேர்ந்தவர்கள் திருடர்கள் வீட்டில் நுழைந்ததை உணர்ந்து கூச்சலிட்டனர்.
இதனை அடுத்து, அவ்வீட்டை சுற்றிவளைத்த ஊர்மக்கள், வீட்டில் நுழைந்த திருடர்களை வெளியே இழுத்து வந்தனர். தொடர்ந்து, கையில் கிடைத்ததைக் கொண்டு திருடர்களை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர்.
ஏராளமானோர் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டதால் வலி தாங்கமுடியாமல், தங்களை மன்னித்துவிடுமாறு திருடர்கள் இருவர்கள் கெஞ்சினர். இருந்தபோதிலு, கோவம் தணியாத பொதுமக்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டதால் கடுமையான காயங்களுக்கு உள்ளான இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்பையும் மீறி புழல் சிறையில் இருந்து தப்பித்த ஆயுள் தண்டனை கைதி! June 30, 2017
By Muckanamalaipatti 5:57 PM
சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியில், கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில், குற்றவாளி ஜெயராஜ்-க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து புழல் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் ஜெயராஜ் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தார். மாலை ஆறு மணிக்கு கைதிகளை கணக்கெடுத்த போது, ஜெயராஜ் தப்பியது தெரிய வந்தது. இதனையடுத்து தப்பியோடிய ஜெயராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
பாதுகாப்பு கெடுபிடிகள், சிசிடிவி கேமராக்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் என பலத்த பாதுகாப்பு மிகுந்த புழல் சிறையிலேயே ஆயுள் கைதி தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவிடைமருதூர் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து எண்ணெய் கசிவு! June 30, 2017
By Muckanamalaipatti 5:57 PM
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் அருகே பதிக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அப்பகுதியில் எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பது, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வந்த நிலையில், அதனைக் கண்டுகொள்ளாமல் கடந்த ஜூன் 1ந் தேதி 2 ஆயிரம் போலீசார் உதவியுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த பணிகளை மேற்கொண்டது.
இந்நிலையில் கதிராமங்கலம்-பந்தநல்லூர் இடையே ஓஎன்ஜிசி எரிபொருள் குழாயில் இன்று ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அதிலிருந்து எரிபொருள் வெளியேறியது. எரிபொருள் அப்பகுதி முழுவதும் பரவிக் காணப்பட்ட நிலையில், பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, எரிபொருளை அப்பகுதி வழியாகக் கொண்டு சென்ற ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும், அங்கு முன் எச்சரிக்கைகளை மேற்கொள்ள தீயணைப்புத்துறையினரும் ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகளும் குவிந்தனர். அப்போது அவர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள், எரிபொருள் குழாயை அங்கிருந்து முழுமையாக அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜி.எஸ்.டி-க்கு விரிவாக்கம் தெரியாமல் திணறிய அமைச்சர்! June 30, 2017
By Muckanamalaipatti 5:55 PM
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட உள்ள நிலையில், ஜிஎஸ்டிக்கு விரிவாக்கம் தெரியாமல் உத்தரபிரதேச அமைச்சர் திணறிய சம்பவம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச சமூகநலத்துறை அமைச்சர் ரமாபதி சாஸ்திரியிடம் பத்திரிகையாளர்கள் ஜிஎஸ்டி விரிவாக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர், ஜிஎஸ்டிக்கு விரிவாக்கம் தெரியாமல் தடுமாறினார்.
அமைச்சரின் பின்னால் நின்றுக் கொண்டிருந்த நபர் ஜி.எஸ்.டிக்கான விளக்கத்தை அவருக்கு ரகசியமாக கூறிய போதும், அதை புரிந்துக் கொண்டு செய்தியாளரின் கேள்விக்கு அவரால் பதிலளிக்க முடியாததால் சற்று நேரம் இறுக்கமான சூழல் நிலவியது.

பின்னர் ஜி.எஸ்.டி குறித்து தனக்கு தெரியும் என்றும், எனினும், இது குறித்து முழுமையாக அறிய முயற்சி செய்து வருவதாகவும் கூறினார். உத்தரபிரதேச அமைச்சர்களுக்கு ஜி.எஸ்.டியின் முக்கியத்துவம் மற்றும் சாதக-பாதகங்கள் குறித்து விளக்கம் அளிக்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்த போதிலும் அம்மாநில அமைச்சர் ஒருவர், ஜி.எஸ்.டி-க்கு விரிவாக்கம் கூட தெரியாதமல் விழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழச்சி கிளப்பிய அதிரவைக்கும் சர்ச்சை… ஜெயலலிதா அப்போலோவில் இருந்த போது, அமைச்சர் விஜய பாஸ்கரால் தா
By Muckanamalaipatti 11:02 AM
ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே பல பகீரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் முகநூலில் தமிழச்சி என்ற பெயரில் பக்கம் கொண்ட பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற பெண்.
கடந்த சில நாட்களாக எந்தவிதமான கருத்துகளையும் வெளியிடாமல் இருந்தவர். தற்போது திடீரென பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் முகநூலில் பதிவிட்ட பதிவில் இருந்த தகவல்கள்,
வருமான வரித்துறை 3 முக்கிய நபர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறது.
போதை பொருட்களடங்கிய தடை செய்யப்பட்ட பொருளை விற்பனை செய்வதற்காக இலஞ்சம் பெற்றவர்கள்:
1. அமைச்சர் விஜயபாஸ்கர்.
2. சென்னை முன்னால் கமிஷனர் ஜார்ஜ்.
3. தற்போதைய கமிஷனர் டி.கே.ராஜேந்திரன்
2. சென்னை முன்னால் கமிஷனர் ஜார்ஜ்.
3. தற்போதைய கமிஷனர் டி.கே.ராஜேந்திரன்
இதே மூன்று பேரும் இணைந்து தான் சுவாதி, ராம்குமார், ஜெயலலிதா படுகொலை வரை கூட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்கள்.
குட்கா ஊழலில், 1.4 கோடி இலஞ்சம் டி.கே.ராஜேந்திரன் வாங்கியுள்ளதாக வருமான வரித்துறை கூறுகிறது.
ராம்குமாரை குற்றவாளியாக்கி சிறைக்குள் அவனை சாகடிக்கும் வரை ஆர்.எஸ்.எஸ்க்கு எடுபிடி வேளை பார்த்த டி.கே. ராஜேந்திரன் அதற்காக எவ்வளவு தொகை பெற்றார்?
ஜெயலலிதா அப்போலோ மருத்துவனைக்குள் கொண்டு செல்வதற்குள் அங்கிருந்த வீடியோ கேமராக்களை கழற்றச் சொல்லி உத்தரவு போட்ட டி.கே ராஜேந்திரன் யார் சொல்லி அதை செய்தார்? அதற்காக அவர் பெற்றுக் கொண்ட தொகை எவ்வளவு?
ஜெயலலிதா ஆம்புலன்ஸ் வந்த வீடியோ காட்சிகள் அப்போலோவிலும் போயஸ்கார்டனிலும் நீக்கப்பட்டுள்ளன.
உளவுத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த டி.கே ராஜேந்திரன் அத்தனை ஆதாரங்களையும் அழிப்பதற்கு யாரிடம் இருந்து எவ்வளவு தொகை பெற்றார்?
ஜெயலலிதா அப்போலோவில் இருந்த போது அதன் முழுபொறுப்பும் சுகாதாரத்துறையைச் சார்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டில் இருந்ததோடு, மோடி அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் உடந்தையாகவும் இருந்தார்.
‘எடுபிடிக்கு எடுப்பிடி’ என்று செயல்பட்ட இந்த மூன்று எடுப்பிடி கூட்டாளிகளையும் எதற்காக வருமான வரித்துறை மூலமாக மாட்ட வைத்திருக்கிறது மோடி அரசு?
அரசியல்வாதிகள் தங்கள் இரகசியங்களை தெரிந்து வைத்துள்ள எடுபிடிகள் அடியாட்களை உயிரோடு வைத்திருப்பதில்லை. இது அரசியல்வாதிகளின் கள்ள பண்புகளில் ஒன்று.
என்று தனது முக நூல் பதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
http://newstig.com/news/46793/bribe-to-minister-and-top-cops-by-gutkha-dealers
மதுபாட்டிலால் பெண் குத்திக் கொடூரக்கொலை! June 29, 2017
By Muckanamalaipatti 9:48 AM
திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி குழுமணி பேரூர் பகுதியைச் சேர்ந்த மாலா என்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இதே பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். இந்நிலையில், பேரூர் ஊராட்சிமன்ற கட்டடத்தின் பின்புறத்தில், மாலா மார்பு உள்ளிட்ட பகுதியில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி ஜீயர்புரம் போலீசார் பெண் படுகொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, உயிரிழந்த பெண்ணின் மார்பில் மதுபாட்டில் குத்தப்பட்டதற்கான அடையாளத்தை போலீசார் கண்டறிந்தனர். குடிபோதையில் மாலாவை பாலியல் வன்கொடுமை செய்து யாரேனும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆசிரியரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை! June 29, 2017
By Muckanamalaipatti 9:47 AM
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவிநாசியை அடுத்த அ.குரும்பபாளையம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நான்காம் வகுப்பு ஆசிரியராக அவிநாசியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பணியாற்றிவருகிறார். இவர் தனது வகுப்புகளின் போது, பெண் குழந்தைகளிடம் வரம்பு மீறி பாலியல் தீண்டுதல் மற்றும் பாலியல் தொல்லைகள் கொடுத்துவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விபரம் அறிந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேயூர் போலீசார் பொதுமக்களை சமரசம் செய்து, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அரசு பள்ளி ஆசிரியர் பெண் குழந்தைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம்! June 30, 2017
By Muckanamalaipatti 9:46 AM
விசைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக, திருச்செங்கோடு வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றின் மூலம் உற்பத்தியாகும் துணிகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் விசைத்தறி தொழில் முடங்கும் அபாயம் உள்ளதாக, விசைத்தறி தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தால் சுமார் 30 கோடி ரூபாய் அளவுக்கான வர்த்தகம் பாதிக்கும் என, திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 29 ஜூன், 2017
வரலாற்றுப் பதிவு.
By Muckanamalaipatti 10:12 PM
இந்தியா முழுமைக்குமான "பாசிஸ அழிவு போராட்டம்" தமிழ்நாடு மாநிலம், பழனி நகரில் 28/06/2017 அன்று துவக்கப்பட்டது.
# வரலாற்றுப் பதிவு.
# வரலாற்றுப் பதிவு.
கலவரத்திற்கு காரணமான பார்ப்பான் மீது வழக்கு இல்லை .
By Muckanamalaipatti 10:04 PM
பசு மாட்டை ...
விற்றவர் இந்து விவசாயி.
வாங்கியவர் இந்து விவசாயி
வாங்கியவர் இந்து விவசாயி
இடையில் புகுந்து கலவரத்தை தூண்டியவன் பார்ப்பான்.
கலவரத்தை அடக்க போன மக்கள் 22 பேர் மீது வழக்கு.
கல்வீசி தாக்குதல் நடத்தி கலவரத்திற்கு தூபம் போட்ட சங்பரிவார் குரங்குகளில் ஐந்து பேர் மீது மட்டுமே வழக்கு.
கலவரத்திற்கு காரணமான பார்ப்பான் மீது வழக்கு இல்லை .
SOURCE: ARASIYAL NAYANDI
“சௌதியா விமானம் இஸ்ரேல் விமான நிலையத்தில் இருப்பதைக் காட்டும் படம் போலி”
By Muckanamalaipatti 9:55 PM
சௌதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான 'சௌதியா', அதற்குச் சொந்தமான விமானம் ஒன்று இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் குரியன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருப்பது போன்று சமூக வலைத்தளங்களில் உலவி வரும் புகைப்படம் அரசியல் உள்நோக்கம் கொண்ட புனைவு என்று மறுத்துள்ளது.
"தங்கள் நாட்டின் ஒரு தேசிய சின்னமாகத் திகழும் அந்த விமான நிறுவனத்திற்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்படும், அநாமதேய, பெரிய அளவிலான சமூக வலைத்தள கணக்குகள் மூலம் பொய், வதந்தி மற்றும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை பகிர சில குழுக்கள் இயங்குகின்றன," என்று அரசு செய்தித்தொடர்பாளர் அப்துல் ரஹ்மான் அல்-தயேப் கூறியுள்ளதாக, ஒகஸ் எனும் சௌதி அரேபிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"துரதிர்ஷ்டவசமாக, அப்படங்களின் உண்மை தன்மையை ஆராயாமல் சிலர் அவற்றை பகிர்கின்றனர். அச்செயலுக்கு அவர்களே பொறுப்பாவதுடன், சட்டப்படியான தண்டனைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்," என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த "குழுக்கள்" யாரென்று அல்-தயேப் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், தங்கள் சிறிய அண்டை நாடான கத்தார் மீது சௌதி தலைமையிலான நாடுகள் விதித்துள்ள தடைகளை எதிர்த்து சமூக ஊடகங்களில் தீவிர பிரச்சாரம் செய்பவர்களையே அவர் குறிப்பிடுகிறார் என்று சௌதி வாசகர்கள் புரிந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது.
http://www.bbc.com/tamil/global-40443772?ocid=socialflow_facebook
சௌதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள், கத்தார், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி செய்வதாகவும், அப்பிராந்தியத்தில் சௌதிக்கு எதிரான சக்தியாக இருக்கும் இரானுடன் உறவு கொள்வதாகவும் குற்றம் சாட்டுகின்றன.
இஸ்ரேல் நாட்டின் தேசிய விமான நிறுவனமான எல் அல் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் இந்த பென் குரியன் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் உண்மையான படம் ராய்டர்ஸ் செய்தி முகமையால் எடுக்கப்பட்டது.
இஸ்ரேலுடன் ராஜாங்க ரீதியிலான உறவேதும் இல்லாத சௌதி அரேபியா, அந்த இரு நாடுகளுக்கும் இடையே முறைசாரா உறவுகள் இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து தொடர்ந்து மிகவும் கண்டிப்புடன் இருக்கிறது.
மே 2015-இல் இயக்கப்படாத நிலையில் இருந்த, ஒரு சௌதி அரேபிய விமானத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்த ஒரு போர்ச்சுகீசிய நிறுவனம், பயணிகள் யாரும் இல்லாத அவ்விமானத்தை, பென் குரியன் விமான நிலையத்தில் தரையிறக்கியதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை சவுதி அரேபியா உடனடியாக ரத்து செய்தது.
10 நாட்களில் அல்ஜெசீராவை நிறுத்த கத்தாருக்கு சௌதி நிபந்தனை
வழி மறித்து முஸ்லிம் ஓட்டுனரை தாக்கி காவி இந்து முண்ணனியினர் தீவிரவாதிகள் அட்டூழியம்
By Muckanamalaipatti 9:51 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாடு ஏற்றி வந்த டாடா ஏசி வாகனத்தை வழி மறித்து முஸ்லிம் ஓட்டுனரை தாக்கி காவி இந்து முண்ணனியினர் தீவிரவாதிகள் அட்டூழியம்
# மடாதிபதி விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமிகள்.
By Muckanamalaipatti 9:45 PM
"......மாட்டிறைச்சி விவகாரத்தை வைத்து இஸ்லாமியரை ஒதுக்க முடியாது. காலங்காலமாக இந்து - இஸ்லாம் இடையே ஒற்றுமை இருந்து வருகிறது. அதனை கெடுக்க நினைப்போரை கடவுளும், மக்களும் பார்த்துக்கொள்வர்......"
# மடாதிபதி விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமிகள்.
மதிமாறனுக்கு ஆதரவாகவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்ப்பான்களான எஸ்.வி. சேகர், நாராயணனை கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது
By Muckanamalaipatti 9:42 PM
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்(APSC) சார்பாக தோழர் மதிமாறனுக்கு ஆதரவாகவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்ப்பான்களான எஸ்.வி. சேகர், நாராயணனை கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது நுழைந்த பெண் ஒருவர் நாரயணன் பாணியில் நானும் பாப்பாத்தி தான் என்று சாதிவெறியோடு கத்தினார். மாணவர்கள் பார்ப்பான்களை எதிர்த்து எழுச்சியோடு முழங்கினார்கள்.
நமது பணத்தை சுரண்ட சில திருடர்களால் மேற்கொள்ளப்படும் திருட்டு
By Muckanamalaipatti 9:39 PM
அன்பான சகோதர சகோதரிகளே!!!
அறிமுகமற்ற தொலைபேசி எண்களில் இருந்து பேங்க் மானேஜர் என்று எவனாவது நம்மிடம் ஏடிஎம் கார்டின் எண்களை கேட்டாலோ அல்லது ஆதார் கார்ட் தகவல் கேட்டாலோ தயவு செய்து கொடுத்து விட வேண்டாம்.
நமது பணத்தை சுரண்ட சில திருடர்களால் மேற்கொள்ளப்படும் திருட்டு நடவடிக்கை இது.
கவணமாக இருக்கவும்.
பேங்கிலிருந்து என்று தொலைப்பேசி அழைப்பு வந்தால் நாங்கள் நேரில் பேசிக் கொள்கிறோம் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விடுங்கள்.
விவரம் அறியா பாமர மக்களுக்கு இந்த தகவலை அதிகம் எத்தி வைய்யுங்கள்.
அமெரிக்கா விதித்தத் தடையில் சிறிது தளர்வு! June 29, 2017
By Muckanamalaipatti 9:16 PM
சிரியா,லிபியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை வதித்து ஏற்கனவே டிரம்ப் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தடைகள் சிறிது தளர்த்தப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு, உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
இதில், ட்ரம்ப்பின் தடை உத்தரவுக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த விதிமுறையில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிரியா,லிபியா உள்ளிட்ட 6 நாடுகளின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் தொழில் தொடர்புடையவர்களுக்கு விசா கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெரிய நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் ‘கோல்டன் ஐ’! June 29, 2017
By Muckanamalaipatti 9:15 PM
ஆயிரக்கணக்கான கணினிகள் தினந்தோறும் ரேன்சம்வேர் வைரஸால் தாக்கப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் ஒரு பிரபல மருத்துவமனை ரேன்சம்வேர் தாக்குதலால் மூடப்பட்டது நினைவிருக்கும். இப்போது நிலைமையை மேலும் மோசமாக்க வந்துள்ளது ரேன்சம்வேர் 2.0!
பெட்யா ரேன்சம்வேரின் புதிய திரிபு தான் “கோல்டன் ஐ”. கடந்த செவ்வாய் அன்று உக்ரைனில் உள்ள கீவ் என்ற நகரில் இந்த சைபர் அட்டாக் தொடங்கியது. அங்கிருந்து உக்ரைனில் உள்ள மின்சார வாரியம், விமான நிலையம், அரசு அலுவலகங்கள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை இந்த புதிய ‘கோல்டன் ஐ’. கெர்னோபில் நகரில் அமைந்துள்ள அணு ஆராய்ச்சி நிலையத்தையும் தாக்கியதால் அணு கதிர் வெளியீட்டை கூட ஊழியர்களே கண்கானிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அன்றிலிருந்து இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தத்து.
ரஷ்யாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்னெஃப்ட் இந்த சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. துறைமுகத்தில் ‘மேயர்ஸ்க்’ என்ற பெயரை கடக்காமல் வந்திருக்க மாட்டோம். உலகிலேயே மிகப்பெரிய ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனமான டென்மார்க்கை சேர்ந்த இந்த மேயர்ஸ்க், ரேன்சம்வேர் தாக்குதலை தடுக்க தங்களது கணினி நெட்வொர்க் அனைத்தையும் சில நாட்களுக்கு மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 2 லட்சம் கணினிகள் இந்த புதிய கோல்டன் ஐ ரேன்சம்வேரால் தாக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இது அடுத்த சில நாட்களில் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் நிகழ்த்த இந்த ‘கோல்டன் ஐ’ வெறும் 44 நாட்களே எடுத்துக்கொண்டது.
ஏற்கனவே இதன் மூலம் பல கோடி பணம் பார்த்துவிட்ட வானாக்ரை, வரும் தினங்களில் மேலும் பல நாடுகளை தாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கான தீர்வை காணும் வரை இந்த ரேன்சம்வேரின் ஆட்டம் ஓயாது.

ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ் அறிவிப்பு June 29, 2017
By Muckanamalaipatti 9:14 PM
நாடாளுமன்றத்தில் நாளை இரவு நடைபெறவுள்ள ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தை புறக்கணிக்க, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
ஜிஎஸ்டி மசோதாவில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக காங்கிரஸ் அளித்த பல்வேறு பரிந்துரைகள் ஏற்கப்படாததால், விழாவை புறக்கணிக்க வேண்டும் என கட்சியில் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. சதுர்வேதி, ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளாது என தெரிவித்தார். ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சாலை ஓரத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்! June 29, 2017
By Muckanamalaipatti 9:14 PM
மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் சாலையோரமாக வண்டியுடன் பாதுகாப்பு அதிகாரிகளை நிறுத்தி வைத்துவிட்டு சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் (ஆர்.ஜே.டி) இன்று (29-06-2017) அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், பொது இடத்தில் சாலையோரமாக நின்று சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு “தூய்மை இந்தியா” (Swatch Bharat) இப்போது எங்கே போனது என கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரக்லாக பரவிவரும் இந்த படங்கள்
பீகாரில் மோதிஹாரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் கடந்த 2014ம் ஆண்டு பாஜக அரசு பதவியேற்றப்போது தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் கடந்த பட்ஜெட் தொடரின் போது தூய்மை இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

2023-ல் மின் உற்பத்தி தொடக்கம்! June 29, 2017
By Muckanamalaipatti 9:13 PM
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 3-வது அணு உலையில் 2023-லிலும், 4-ஆவது உலையில் 2024-ஆம் ஆண்டும் மின் உற்பத்தி தொடங்குமென அணுசக்தி கழக இயக்குநர் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் திறன் கொண்ட இரு அணு உலைகள் இயங்கிவருகின்றன. இதனிடையே, 3 மற்றும் 4-ஆவது அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் இந்தியா, ரஷ்யா இடையே கையெழுத்தானது. இந்நிலையில், 3 மற்றும் 4-ஆம் உலைகளுக்கான அடித்தள கான்கிரீட் அமைக்கும் பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அணுசக்தி கழகத் தலைவர் எஸ்.கே.சர்மா, அணுசக்தி கழக இயக்குநர் பானர்ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

விரைவில் புழக்கத்திற்கு வருகிறது புதிய 200 ரூபாய் நோட்டு! June 29, 2017
By Muckanamalaipatti 11:44 AM
புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. இந்த புதிய நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு நவம்பர் 8ம் தேதி பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்தது. அதனைத் தொடர்ந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும், கடந்தாண்டு இறுதியிலும், ஜனவரி மாதத்திலும் கடுமையான சில்லறைப் பற்றாக்குறையால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத போதிலும், தற்போது அதனை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய 200 ரூபாய் நோட்டுகளின் படம் எனக் கூறி வாட்ஸ் ஆப் உள்ளிட்டவைகளில் படம் வேகமாக பரவி வருகிறது.

இன்று அறிவிக்கப்படுகிறது குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி! June 29, 2017
By Muckanamalaipatti 11:43 AM
குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய துணை குடியரசுத் தலைவரான ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. குடியரசுத் துணைத் தலைவர், மாநிலங்களவை தலைவராகவும் செயல்படக் கூடியவர். எனவே, புதிய குடியரசுத் துணைத் தலைவர் பதவி மிகந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
குடியரசுத் துணைத் தலைவரை, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். இரு அவைகளின் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 790 என்ற போதிலும், ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன. கோவா மாநிலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினருக்கானத் தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இம்மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாந்தாராம் நாயக்கின் பதவிக் காலம் ஜூலை 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஜூலை 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு குறித்து சோனியாகாந்தி இன்று முடிவு! June 29, 2017
By Muckanamalaipatti 11:42 AM
ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பங்கேற்பதா அல்லது புறக்கணிப்பதா ? என்பது குறித்து, கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளார்.
ஜிஎஸ்டி மசோதாவை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு என்பதால், இதில் கலந்து கொள்ள வேண்டும் என கட்சியில் ஒரு பிரிவினர் கருதுவதாகக் கூறப்படுகிறது. எனினும், ஜிஎஸ்டி மசோதாவில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அளித்த பல்வேறு பரிந்துரைகள் ஏற்கப்படாததால், விழாவை புறக்கணிக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசித்து, கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று முடிவு அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்து விட்டார். ஜிஎஸ்டி மசோதாவுக்கு தொடக்கம் முதல் ஆதரவு தெரிவித்து வந்தாலும், அதை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் வழிமுறை ஏற்கத்தக்கதாக இல்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனமான “ஏர் இந்தியா”-வை தனியார் மயமாக்க முடிவு! June 29, 2017
By Muckanamalaipatti 11:42 AM
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு திருத்தங்களுடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க, கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.
இதன்பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 34 திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், வரும் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 78 கோடி ரூபாய் கூடுதலாக செலவீனம் ஏற்படும் என்றும் அருண்ஜெட்லி தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி வீட்டு வாடகைப்படி உயர்வும் சில திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மேலும் தெரிவித்தார்.

அசாமில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரு லட்சம் பேர் பாதிப்பு! June 28, 2017
By Muckanamalaipatti 8:25 AM
அசாமில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி, அந்த மாநிலத்தின் 8 மாவட்டத்தை சேர்ந்த ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக அசாமிலுள்ள 5 ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டியுள்ளன. கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் குறைந்திருந்தாலும் வெள்ளம் வடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தின் தாக்கத்தால் 1380 ஏக்கள் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 150 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மாநில அரசு சுணக்கம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! June 28, 2017
By Muckanamalaipatti 8:25 AM
இறைச்சிக்கான மாடு விற்பனை கட்டுப்பாடுகளுக்கான இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி மற்றும் மதுரை கலிமங்கலத்தை சேர்ந்த ஆசிக் இலாகி பாவா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் 4 வாரத்திற்கு இடைக்கால தடை விதித்து கடந்த 30-ந் தேதி உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம் மற்றும் ஆதிநாதன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால தடையை மேலும் 4 வாரங்கள் நீட்டித்ததோடு, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இருதரப்பினரிடையே மோதல்; போலீஸ் தடியடி! June 28, 2017
By Muckanamalaipatti 8:24 AM
பழனியில் பசுக்களை மினி லாரியில் ஏற்றிச் சென்றது தொடர்பாக இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கல்வீச்சில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
மணப்பாறையில் இருந்து, பழனி வழியாக பொள்ளாச்சி தேவனூர்புதூருக்கு 7 பசுங்கன்றுகளை ஏற்றி சென்ற வாகனத்தை, மன்னார்குடி வைஷ்ணவ மடத்தை சேர்ந்த செண்டலங்கார செண்பக ஜீயர் என்பவர், தடுத்து பழனி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதை அறிந்து பழனி காவல்நிலையத்தில் ஜீயருக்கு ஆதரவாக இந்து அமைப்பினரும், எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் குவிந்தனர். ஜீயரை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், காவல்நிலையத்தில் இருந்து ஜீயர் வெளியேறும்போது, அவர் சென்ற வாகனத்தின் மீது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல மற்றொரு தரப்பினரும் சாலைமறியல் செய்தனர். இதைத் தொடர்ந்து பேருந்து மீது திடீரென கற்கள் வீசப்பட்டதால், கலவரத்தை கட்டுப்படுத்த அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். இந்த கலவரத்தால் பழனி நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

ஃபேஸ்புக்கை முந்திய வாட்ஸ் அப்! June 28, 2017
By Muckanamalaipatti 8:23 AM
சர்வதேச அளவில் பல நாடுகளில் செய்திகளை தெரிந்து கொள்ள மக்கள் வாட்ஸ் அப் செயலியை அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்ற தகவல் ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் இதழியல் மாணவர்களை வைத்து 36 நாடுகளில் 71,805 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை விட வாட்ஸ் அப் மூலமே மக்கள் செய்திகளை பார்த்து தெரிந்து கொள்கின்றனர் என தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஃபேஸ்புக் மூலமே பெரும்பாலான மக்கள் செய்திகளை தெரிந்துகொள்வதாக பலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பலர் வாட்ஸ் அப் மூலமே செய்திகளை தெரிந்து கொள்வதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் 51 சதவீதம் மக்களும், பிரேசிலில் 46 சதவீதம் மக்களும், செலி நாட்டில் 39 சதவீதம் மக்களும், சிங்கப்பூரில் 38 சதவீதம் மக்களும், ஹாங்காங்கில் 36 சதவீதம் மக்களும், ஸ்பெயினில் 32 சதவீதம் மக்களும், துருக்கி நாட்டில் 25 சதவீதம் மக்களும் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் அப்பை பயன் படுத்துகின்றனர்.
செய்திகளையும் நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொள்ள ஃபேஸ்புக்கையே பலர் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப்பை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.