புதன், 14 ஜூன், 2017

5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராதப் பள்ளிக்கட்டிடம்! June 14, 2017

5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராதப் பள்ளிக்கட்டிடம்!


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராததால், வீதியில் அமர்ந்து மாணவர்கள் படிக்கும் அலவம் தொடர்கிறது.

கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இருப்பினும் முறையான கட்டிட வசதிகள் இல்லாததால், சமுதாயக் கூடம் மற்றும் சாலைகளில் அமர வைத்து, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

கல்வி பயிலும்போது மழை வந்தால் மாணவ, மாணவிகள் எழுந்து ஓடும் அவல நிலை இன்றளவிலும் தொடர்கிறது. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சாலையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவி கிருஷ்ணவேணி, அரசுப் பேருந்து ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நடைபெற்றும், தற்போது வரை சாலையிலேயே பாடம் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மாணவர்களின் வேதனையைப் போக்க, புதிய பள்ளிக் கட்டிடம் கட்டு முடிக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய கட்டிடத்திற்கு பள்ளி மாற்றப்படாமல் உள்ளதால், மாணவ, மாணவிகள் சாலைகளிலேயே அமர்ந்து படிக்கும் அவல நிலை தொடர்கிறது.

எனவே, புதிய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், முறையான வாகன வசதியை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டுமென, மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Posts: