வெள்ளி, 9 ஜூன், 2017

உலகின் அசுத்தமான நதிகளில் கங்கைக்கு 2ம் இடம்! June 09, 2017

 உலகின் அசுத்தமான நதிகளில் கங்கைக்கு 2ம் இடம்!


இந்தியாவில் கிட்டத்தட்ட 8 மாநிலங்களில் பாயும், மற்றும் பலராலும் வழிப்பாட்டு பொருளாக கருதப்படும் கங்கைநதி உலகின் அசுத்தமான நதிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக Nature Communications journalல் செய்தி வெளியாகியுள்ளது.

உலகில் பாயும் நதிகளிலே அசுத்தமான நதிகள் பட்டியலில் இந்தியாவின் கங்கை நதி இரண்டாம் இடத்தில் உள்ளது. 2007 வெளியான பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த கங்கை நதி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. 

2014ம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் முன்னெடுத்த திட்டங்களில் மிக முக்கியமான திட்டம் கங்கை நதியைச் சுத்தம் செய்யும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன் கங்கை நதியைச் சுத்தம் செய்ய பத்து வருடங்கள் எடுக்கும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிந்திருந்தார். 

கங்கை நதியைச் சுத்தம் செய்ய 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கங்கை நதியைச் சுத்தம் செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு ஆண்டும் 10.5 கோடி கிலோ அளவில் பிளாடிக் குப்பை கங்கை நதியில் கலக்கிறது. 

இந்தக் குப்பைகளை மட்டும் அள்ளுவதற்கு சுமார் 1 லட்சம் குப்பை லாரிகள் தேவைப்படும் எனவும் தெரிகிறது. இந்தப் பட்டியலில் சீனாவில் யாங்சி நதி முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 30 கோடி கிலோ அளவில் குப்பை யாங்சி நதியில் கலக்கிறது. கடலில் சேரும் குப்பைகளில் மூன்றில் இரண்டு பங்கு உலகிலுள்ள நதிகள் மூலமாகவே கடலில் கலக்கப்படுகின்றன. இந்த நதிகளில் பெரும்பாலானவை ஆசிய கண்டத்தை சேர்ந்தது. 

கங்கை நதிக்கு இரண்டாவது இடம் 

உலகின் அசுத்தமான நதிகள் பட்டியலில் இந்தியாவின் கங்கை நதி 2வது இடம்.

2007 வெளியான பட்டியலில் 5வது இடத்தில் இருந்தது கங்கை நதி. 

கங்கை நதியைச் சுத்தம் செய்யும் திட்டம் - பாஜக அரசின் மிக முக்கியமான திட்டம். 

கங்கை நதியைச் சுத்தம் செய்ய பத்து வருடங்கள் எடுக்கும் - அமைச்சர் உமா பாரதி. 

மத்திய அரசு ஒதுக்கிய நிதி - ரூ 11 ஆயிரம் கோடிக்கு மேல். 

ஒவ்வொரு ஆண்டும் 10.5 கோடி கிலோ அளவில் பிளாஸ்டிக் குப்பை கலக்கிறது. 

குப்பைகளை அள்ளுவதென்றால் சுமார் 1 லட்சம் குப்பை லாரிகள் தேவைப்படும். 

அசுத்தமான நதிகள் பட்டியலில் சீனாவில் யாங்சி நதி முதலிடம்.

ஒவ்வொரு ஆண்டும் 30 கோடி கிலோ அளவில் குப்பை யாங்சி நதியில் கலக்கிறது. 

கடலில் சேரும் குப்பைகளில் மூன்றில் இரண்டு பங்கு நதிகள் மூலமாகவே கடலில் கலக்கின்றன.

Related Posts: