வெள்ளி, 9 ஜூன், 2017

பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு June 08, 2017




நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யவுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்தும் மற்றும் குறைத்தும் வருகின்றன. இதன்படி புதுச்சேரி உள்ளிட்ட 5 நகரங்களில் தினமும் விலை நிர்ணயம் செய்திடும் நடைமுறை ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 16-ம் தேதி முதல், நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்திட எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. 

Related Posts: