வியாழன், 22 ஜூன், 2017

31 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-38! June 22, 2017




நாளை விண்ணில் செலுத்த உள்ள கார்ட்டோசாட் - இரண்டு செயற்கைகோள் நகர்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு வெகுவாக உதவும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சமீபத்தில் மார்க்3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் நாளை  காலை 9 மணி 30 நிமிடத்திற்கு 31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி 38 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. 

712 கிலோ எடைகொண்ட கார்டோசாட்-2 செயற்கைகோள் மற்றும் 30 சிறிய செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி சி-38 மூலம்  நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதில் 29 செயற்கைகோள்கள் பெல்ஜியம், பிரிட்டன், சிலி, ஆஸ்திரியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தவை. அவற்றை வர்த்தக ரீதியில் இந்தியா விண்ணில் செலுத்துகிறது. 

இஸ்ரோவின் தயாரிப்பான கார்டோசாட்-2 வரிசை செயற்கைக்கோள்கள், புவி ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் பிஎஸ்எல்வி சி 38 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை 5 மணி 30 நிமிடத்திற்கு தொடங்கியது.

இந்நிலையில்,  ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் கிரண்குமார், மங்கல்யாண் விண்கலம் 6 மாதமே செயல்படும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆயிரம் நாட்களை கடந்து வெற்றிகரமாக மங்கல்யாண் செயல்பட்டு வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். 

நாளை விண்ணில் பாய உள்ள கார்ட்டோசாட் 2 செயற்கைகோள் நகர்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு பெரிதும் உதவும் என்றும் கிரண்குமார் தெரிவித்தார்.

Related Posts: