வியாழன், 22 ஜூன், 2017

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி இலங்கை கடற்படை தாக்குதல்! June 22, 2017




கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர், கச்சத்தீவு பகுதியில் நேற்று  மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களின் மீன்பிடி வலைகளையும், படகுகளில் இருந்த ஜி.பி.எஸ். உள்ளிட்ட மீன்பிடி கருவிகளையும் சேதப்படுத்தினர். 

அதனைத் தொடர்ந்து சேகர் என்பவருக்கு சொந்தமான படகில் இருந்த 5 மீனவர்களை, படகிலேயே கட்டி வைத்து இலங்கை கடற்படையினர் தாக்கியதுடன், அவர்களை கடுமையாக துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாலை 4 மணியளவில் தொடங்கிய இலங்கை கடற்படையின் அட்டூழியம், இரவு 11 மணி வரை நீடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Related Posts: