அவுஸ்திரேலியாவிலிருந்து கட்டாரிற்கு 4000 கறவை பசுக்கள்!
==========
==========
கட்டாருடன் ஏனைய வளைகுடா நாடுகள் இராஜதந்திர உறவூகளை நிறுத்தியுள்ளதால் கட்டாரில் பால் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்படும் என்னும் அச்சத்தால் 4000 கறவை பசுக்களை அவுஸ்திரேலியாவில் இருந்து கட்டாரின் வர்த்தகர் ஒருவரால் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவர் இன்டநெசனல் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவர் மௌடாஸ் அல் கயாட்; 560 கிலோ நிறையுடைய குறித்த பசுக்கள் 60 கட்டார் எயார்வேஸ் விமானங்கள் மூலம் இவை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
‘இதுவே கட்டாருக்கு சேவை செய்ய வேண்டிய தருணம்” என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 5ஆம் திகதி முதல் கட்டார் புதிய இறக்குமதியினை ஆரம்பித்துள்ளதாகவும்இஇதற்கமைய உணவு வகைகள், கட்டிட உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட சர்வதேச வர்த்தக நடவடிக்கை வழமைப் போல் நடைபெறுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதற்கமைய துருக்கியில் இருந்து பால் சார்ந்த உற்பத்தி பொருட்கள் மற்றும் ஈரானில் இருந்து இறக்கமதி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் என்பன வழமைபோல் இறக்குமதி செய்யபடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.