மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் நடக்கும் அரசியல் மாற்றம் ஒன்றும் சொல்வதற்கில்லை.
மத்திய அமைச்சர் பொன். ராதகிருஷ்ணனும், தமிழிசையும் ஊடகங்களுக்கு விடுக்கும் சில பேட்டிகள் அச்சு பிசகாமல் அப்படியே நடக்கிறது.
சசிகலா கைது நடவடிக்கையை கூட இலை மறை கனியாக தமிழிசை ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் முன்பே, பொது தேர்தலை சந்திக்க வேண்டி வரும் என கூறினார்.
அதன் உள் அர்த்தம் நோக்கும் போது அ.தி.மு.க கட்சியினுள் உள் கட்சி பூசல் ஏற்பட்டு ஆட்சி கவிழும் என்பதை மறைமுகமாக தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் தினகரன் கைது நடவடிக்கை மூலம் அது வெறும் வெற்று வார்த்தை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இப்போது தினகரன் வெளியே வந்துள்ளதால் கட்சிக்குள் மீண்டும் களோபரம் வெடித்துள்ளது.
இரண்டு அணியாக இருந்தது, மூன்று அணியாக பிரிந்து விட்டது.
இனி சட்ட சபை கூடும் பட்சத்தில் வெட்டு தீர்மானம் யாரவது கொண்டு வந்து விட்டால் ஆட்சியே ஆட்டம் கண்டு விடும்.
இதெல்லாம் முன்பே தெரிந்தது போல பா.ஜ.க வினர் பேட்டு அளிப்பது திட்டமிட்டே அரங்கேற்றுவதை போல உள்ளது.
http://kaalaimalar.in/bjp-rulling-party-of-the-tamilnadu-govt/