வெள்ளி, 9 ஜூன், 2017

உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தும் வடகொரியா! June 08, 2017

உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தும் வடகொரியா!


நிலத்திலிருந்து கடலுக்குள் சென்று கப்பலைத் தாக்கும் வகையிலான ஏவுகணைகளை வடகொரியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் பதற்றமேற்படுத்தும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வடகொரியாவுக்கு எதிராக அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு மேலும் சில பொருளாதாரத் தடைகளை விதித்தது. இத்தடை விதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஒரு ஏவுகணைச் சோதனையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. கடலில் பயணம் மேற்கொள்ளும் போர்க்கப்பலைத் தாக்கும் வகையிலான ஏவுகணைகளை கடற்கரை நகரமான வான்சனில் இருந்து, வடகொரியா இன்று காலை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. 

இது குறித்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளபோதிலும், கூடுதல் விவரங்களைத் தர அவர் மறுத்துவிட்டார். வடகொரியாவின் இது போன்ற தொடர் அத்துமீறல்கள் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts: