பிரிவினைவாத தலைவர்கள் அழைப்பின்பேரில் காஷ்மீரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சோபியான் மாவட்டத்தில் சில தினங்களுக்குமுன், பாதுகாப்புப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை என்ற பெயரில், துப்பாக்கிச்சூட்டை பாதுகாப்பு படையினர் மேற்கொள்வதாக குற்றச்சாட்டி, காஷ்மீர் பிரிவினை தலைவர்கள் கிலானி, மிர்வியாஸ் உள்ளிட்டோர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இதனை அடுத்து, ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. முழு அடைப்பை ஒட்டி, பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.