வெள்ளி, 9 ஜூன், 2017

பிரிட்டன் பொதுத்தேர்தல் ; தெரசா மேவுக்கு பின்னடைவு! June 09, 2017

பிரிட்டன் பொதுத்தேர்தல் ; தெரசா மேவுக்கு பின்னடைவு!


பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட நிலவரத்தின் படி, பிரதமர் தெரசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சிக்கு  பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 650 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் தற்போது வரை 350 இடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  இதில் 159 இடங்களைக் கைப்பற்றி ஜெர்மி கார்பைனின் தொழிலாளர் கட்சி முன்னிலை வகிக்கிறது. பிரதமர் தெரசா மே-வின் கன்சர்வேடிவ் கட்சி  148 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. 

தலைநகர் லண்டன் மற்றும் மான்செஸ்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களும், இந்தத் தேர்தலில், ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.