பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற வருமான வரித்துறை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வருமான வரி செலுத்துவதற்கும், பான் கார்டு பெறுவதற்கும் ஆதார் அவசியம் என மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. மேலும், வருமான வரி செலுத்துவோர் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி தேதி ஜூன் 30 என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆதார் எண் கட்டாயமல்ல என உச்சநீதிமன்றம், ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவு நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்புக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், பான் கார்டு செல்லும் என்றும், பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் அல்ல என்றும் தங்கள் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் விவகாரத்தில், அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் வரை இந்த தடை தொடரும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஆதார் எண் உள்ளவர்கள், பான்கார்டு எண்ணை இணைத்து கொள்ள தடையில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆதார் எண் எதற்கெல்லாம் அவசியம்?
➤மத்திய அரசின் 19 அமைச்சத்தின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்.
➤சிலிண்டார் மானியம், 100 நாள் வேலைத் திட்டம், உணவு மானியம் போன்ற திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்.
➤பள்ளிகளில் இலவச மதிய உணவு உண்ணும் குழந்தைகளுக்கு ஆதார் எண் கட்டாயம்.
➤விவசாயிகள் பயிர்காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையை பெறவதற்கு ஆதார் அவசியம்.
➤வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான இலவச சமையல் எரிவாயு பெறவும் ஆதார் அவசியம்.
➤அரசின் மானிய உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயம்.
➤டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக மத்திய அரசின் BHIM செயலி பயன்படுத்த ஆதார் முக்கியம்.
➤ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம்.
➤வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைத் தவிர்க்க ஆதார் பயன்படுத்தப்படுகிறது.