செவ்வாய், 13 ஜூன், 2017

திருவள்ளூர் மாவட்டம் அருகே தடுப்பணை கட்டும் ஆந்திரா! June 13, 2017




பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு கட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தக்கோரி, தமிழக விவசாயிகள் ஒன்று திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டுஅருகே வெளியகரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் வரவு கால்வாயில் 5 இடங்களில் தடுப்பணை கட்ட ஆந்திரமாநிலம் சித்தூர் பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுவருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் ஏராளமானவர்கள் வாகனங்களில் சென்று தடுப்பணை கட்டுவதை தடுக்க அப்பகுதிக்கு சென்றதால் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது..

தடுப்பணை கட்டினால்  ஏரி்க்கு தண்ணீர் வராமல் 2000ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் ஆந்திர அரசு  தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.