உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் நாள் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப் போவதாக விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்துள்ளன.
இதுபற்றிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பிரகாஷ்குமார் குப்தா, சரத் சர்மா, தேவதாச சாஸ்திரி ஆகியோர் தலைமையில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பினர் இரண்டாயிரம் கன அடி கற்கள் ராஜஸ்தானில் இருந்து அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ராமர்கோவில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிசத் அமைப்பினர் 3 லாரிகளில் பளிங்குக் கற்களை அயோத்திக்கு கொண்டுவந்து நேற்று இறக்கியது. ஏற்கனவே கடந்த மாதம் 21ம் தேதி இரண்டு லாரிகளில் பளிங்குக் கற்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டது. ஏற்கனவே பல மாநிலங்களில் இருந்து கல், செங்கல் ஆகியவை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த 5 லாரிகளை தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கற்கள் கொண்டு வந்து அயோத்தியில் இறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கற்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு உத்தரபிரதேசத்தில் பொறுப்பேற்ற நிலையில் தற்போது ராமர் கோவில் கட்டும்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், போராட்டங்கள் நடத்தப்படும் என இவ்வழக்கில் பாபர் மசூதி தரப்பில் காலிக் அஹ்மத் கான் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ-யின் மேல்முறையீட்டை ஏற்று அத்வானி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்றுவரும் சூழலில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.