செவ்வாய், 13 ஜூன், 2017

மாட்டிறைச்சித் தடையை எதிர்த்து மேகாலயா சட்டப்பேரவையிலும் தீர்மானம்! June 13, 2017




இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைக் கண்டித்து கேரளாவைத் தொடர்ந்து மேகாலயா மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இறைச்சிக்காக மாடுகளை விற்க, மத்திய அரசு சமீபத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த தடை உத்தரவிற்கு கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கேரள அரசு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியது.  இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா சட்டசபையிலும், மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக,  ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் இந்த சட்டத்தால், மற்ற வடகிழக்கு மாநிலங்களை போலவே, மேகாலயாவின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

மக்களின் உணவு பழக்கத்திற்கு எதிரான இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்' என அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.