டெல்லியில் உள்ள ராம்நகர் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவரை அவரது வீட்டின் அருகிலேயே அடில் என்னும் 22 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் விமான பணிப்பெண் பணிக்காக படித்துவரும் மல்லிகா ஷெட்டி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த புதன் கிழமை (05-07-2017) அன்று மாலை 5:30 மணியளவில் கல்லூரியிலிருந்து திரும்பியபோது ராம்நகர் பகுதியில் அடில் என்னும் 22 வயது இளைஞரால் வழிமறிக்கப்பட்டுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மல்லிகாவை 6 முறை கொடூரமான முறையில் அவர் குத்தியுள்ளார். பின்னர் அந்த கொடூர இளைஞர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் கத்திக் குத்தி ஆழமாக இருந்ததாலும், அதிகமான அளவில் ரத்தம் வெளியேறியதாலும் சிகிசை பலனின்றி அந்த இளம் பெண் இன்று (வியாழன் கிழமை) காலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த அடிலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் எதற்காக இளம்பெண் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் பிரச்சனையின் காரணமாக மல்லிகா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்னும் கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.