வெள்ளி, 16 ஜூன், 2017

திருவண்ணாமலை மலைக் குன்றை ஆக்கிரமிக்க நித்தியானந்தா சீடர்கள் முயன்றதால் பரபரப்பு! June 16, 2017

திருவண்ணாமலை மலைக் குன்றை ஆக்கிரமிக்க நித்தியானந்தா சீடர்கள் முயன்றதால் பரபரப்பு!


திருவண்ணாமலையில் மலைக் குன்றை ஆக்கிரமித்து ஆசிரமம் அமைக்க நித்யானந்தா சீடர்கள் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் பவழ குன்று மலை அமைந்துள்ளது. இந்த இடம் இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பாக நித்தியானந்தாவின் சீடர்கள் பவழகுன்று மலையில் குடில் அமைந்து தினமும் நித்தியானந்தா படத்திற்கு பூஜைகள்  செய்து வந்துள்ளனர். 

இதையறிந்த அப்பகுதிவாசிகள் நித்தியானந்தரின் சீடர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, 10 நாட்களுக்கு முன்பாக மீண்டும் பவழகுன்று மலையை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டும் பணியை நித்தியானந்தா சீடர்கள் தொடங்கியுள்ளனர். 

இதனையடுத்து கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர், அங்கு அமைக்கபட்ட கீற்றுகொட்டகைகள் மற்றும் பஞ்சலோக சிலைகளை அகற்றினர். இதனால் நித்தியானந்தாவின் சீடர்கள், கோட்டாட்சியர் உமாமகேஸ்வரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும் சில பெண் சீடர்கள் பவழக்குன்று மலையின் மீது இருந்து கீழே இறங்க மறுத்ததால் அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கீழே இறங்கச் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Posts: