வெள்ளி, 16 ஜூன், 2017

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி நெடுவாசல் மக்கள் போராட்டம்! June 16, 2017

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி நெடுவாசல் மக்கள் போராட்டம்!


நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக் கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் ஏப்ரல் 12-ம் தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 66-வது நாளாக நடந்த போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். 

மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுகு அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

Related Posts: