ராஜஸ்தான் மாநிலம் நகர் மாவட்டத்தில் ஒரு பெண்ணை இருவர் கடுமையாகத் தாக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இருவர் சேர்ந்து ஒரு பெண்ணை ஜெய்ராம், ஜெய் அனுமான் என முழக்கமிடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு அந்தப் பெண் மறுக்கவே பிளாஸ்டிக் குழாயைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். அந்தப் பெண் அழுது அரற்றியபோதும் அவரை விடாமல் இருவரும் தாக்கியுள்ளனர். அந்த இடத்தில் நின்ற பலரும் இதனை வேடிக்கை பார்த்து சிரித்த போதிலும், ஒருவரும் இந்த அட்டூழியத்தைத் தடுக்கவில்லை.
இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவின் பேரில் விசாரித்த காவல்துறையினர் இருவரைக் கைது செய்துள்ளனர்.