ஞாயிறு, 18 ஜூன், 2017

ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் புகார்! June 17, 2017




தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, குதிரை பேரம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை அவர் ஆளுநரிடம் வழங்கினார். ஊடகங்களில் வெளியான இந்த ஆதாரத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், ஆளுநரிடம்  அவர் வலியுறுத்தினார். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

Related Posts: