KFC நிறுவனம் பிரிட்டனில் உள்ள தனது 900 கடைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வறுத்த சிக்கன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்துவரும் KFC-க்கு பிரிட்டனில் மட்டும் 900 கடைகள் உள்ளன.
இந்நிலையில், KFC நிறுவனத்திற்கு பிரிட்டனில் கோழி இறைச்சியை வழங்கும் DHL எனும் இறைச்சி சப்ளை நிறுவனத்திற்கு போதிய கையிருப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பிரிட்டன் முழுவதும் உள்ள கடைகளில் 900 கடைகளை மூடும் நிலைக்கு KFC தள்ளப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 900 கடைகளில் 560 கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.
இந்த பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதாக DHL நிறுவனம் கூறியுள்ளது சிக்கன் பிரியர்களுக்கு ஆறுதலாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய லாஜிஸ்டிக்ஸ் தோல்வியாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.