உறுதி மொழிகளை நடைமுறைப்படுத்துவோம்: பாலின சமத்துவத்தை 2030-க்குள் கொண்டுவருவோம்' என்ற தலைப்பின் கீழ் ஐநா சபை ஓர் ஆய்வை 90 நாடுகளில் நடத்தி அறிக்கை வெளியிட்டுயிருக்கிறது.
இந்தியாவில் சராசரி பெண்களின் இறப்புகான வயது 54.1 என்றால், தலீத் பெண்களின் இறப்புகான வயது 39.5 என்று ஐநா வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,அந்த அறிக்கையில் இந்தியாவில் ஆதிக்கச் சாதி பெண்களை காட்டிலும் தலீத் பெண்கள் 14.6 வயது முன்கூட்டிய இறக்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த சிக்கலுக்கு காரணமாக சிலவற்றை அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. முறையான கழிவறைகள் இல்லாதது, தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சரியான மருத்துவ வசதி கிடைக்காமல் இருப்பதே தலீத் மக்கள் முன்கூட்டிய இறப்பதற்கு காரணம் என ஐநா அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
சமூகத்தில் மிகவும் ஏழ்மையாக உள்ளவர்களை காட்டிலும் தலித் பெண்களும்,குழந்தைகளும் பின் தங்கியுள்ளனர்,அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி, சுகாதாரம், கண்ணியமான வேலை குறைந்தபட்ச நல்வாழ்வு அவர்களுக்கு சென்று சேரவில்லை என்று அறிக்கையில் கூறிப்பட்டுள்ளது.
மேலும்,சமூகத்தில் சராசரி மக்களுக்கும் அவர்களுக்கும்மான வாழ்வியல் இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது எனவும் அந்த அறிக்கையின் முலம் தெரியவந்துள்ளது.