செவ்வாய், 20 ஜூன், 2017

பொதுமக்களின் வைப்புத் தொகை குறித்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட ரிசர்வங்கி! June 20, 2017




பணமதிப்பிழப்புக்கு பிறகு ஏற்பட்ட கடன், கிரெடிட் வளர்ச்சியின் சரிவு, வைப்பு தொகை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பிரளயம் ஆகியவற்றால் பொருளாதாரத்தில் பொதுமக்களின் நிதி எங்கே சென்றடைந்திருக்கிறது என்பதை பார்ப்போம்.

இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் படி மே மாதத்தின் இறுதியில் கடன்-டெபாசிட் விகிதம் 72% ஆகும். அதாவது 100 ரூபாய் டெபாசிட்டில், ரூ.72 கடனாகவும், மீதமுள்ள தொகை அரசு பத்திரங்களை வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது. ஒரு வருடத்திற்கு முன்னர் வங்கிகள் ஒவ்வொரு ரூ100 வைப்புத்தொகைக்கும் ரூ76 வழங்கின. இது மாதத்தின் கடைசி நாளில் வைப்புத் தொகையின் படி கணக்கிடப்பட்டதாகும்.

கடன்-டெபாசிட் விகிதத்தின் வளர்ச்சியை பார்க்கும்போது, புதிய வரவில் எவ்வளவு விகிதம் கிரெடிட்டுக்கு சென்றிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இது 2016-17ல் கடன் வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவை பிரதிபலிக்கிறது. மார்ச் மாத கணக்கின்படி கடன்-டெபாசிட் விகிதம் 42% ஆகும். அதாவது வரவில் பாதிக்கு மேல் அரசு பத்திரம் வாங்கவே பயன்பட்டுள்ளது. 

இவை குறைந்த அளவே வளர்ச்சி அடைய கூடிய பாதுகாப்பான சொத்துக்கள் ஆகும். பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தது. இது வங்கிகளுக்கு அரசு பத்திரங்களை வாங்குவதன் அவசியத்தை குறைத்தது. பணமதிப்பிழப்பு காலங்களில் இந்த விகிதம் இதை விட குறைவாகவே இருந்தது. நவம்பர் மாதத்தில் 1% இருந்த விகிதம், டிசம்பர் மாதம் 13% ஆக உயர்ந்தது.

கடந்த மாத கடன்-டெபாசிட் விகிதத்தை பார்த்தால் ரூ72 செலவில், சுமார் ரூ17 சேவைகள் மற்றும் தனிப்பட்ட கடன்களுக்கு செல்கின்றன. அதே நேரத்தில் ரூ28க்கும் அதிகமாக தொழிற்சாலைகள் இயக்கத்திற்கு சென்றுள்ளன. ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 10 ரூபாய் மட்டுமே விவசாயத்திற்கு வழங்கப்பட்டது. தனிநபர் கடன்களின் பங்களிப்பு கடந்த ஆண்டில் 21% ஆக இருந்தது 25% வரை உயர்ந்துள்ளது. தொழிற்துறை 41%ல் இருந்து 38% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

வங்கிகளால் சுமக்கப்படும் கடன்களின் விளைவு என்ன? ஒவ்வொரு ரூ72 க்கும் ரூ14 வரை அழுத்தப்படுகிறது. அதாவது வங்கிகளுக்கும் எந்தவொரு வருமானமும் இல்லை, கடனாளிகளுக்கும் பணம் செலுத்துப்படுவதில்லை.

Related Posts: