செவ்வாய், 20 ஜூன், 2017

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! June 20, 2017




ஆலங்குடி அருகே நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நடந்துவரும் போராட்டத்தில் 70வது நாளான இன்று வேற்று கிரகவாசிகளிடம் மரக்கன்றுகள் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த கடந்த பிப்ரவரி 15ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனால் நெடுவாசலில் தொடங்கிய போராட்டம் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டது. 

ஆனால் மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செயல்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரல் 12ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் தினமும் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், 70வது நாளான இன்று வேற்றுகிரகவாசிகளிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வேற்றுகிரகவாசிகள் போல் வேடமணிந்து நிற்க அவர்களிடம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த வேண்டாம் என்று மரக்கன்றுகள் மனு கொடுப்பது போல் நூதன போராட்டம் நடத்தப்பட்டது.

Related Posts: