செவ்வாய், 20 ஜூன், 2017

சேலத்தில் ஆட்டோ ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்ட போக்குவரத்து அலுவலர் June 20, 2017

போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதியப்பட்ட ஆட்டோ ஓட்டுநரிடம் போக்குவரத்து அலுவலர் பகிரங்கமாக லஞ்சம் கேட்டு பேரம் பேசும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.  

சேலம் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மீது, போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்திலேயே ஸ்பாட் பைன் கட்ட முயன்றபோது வழக்கு போட்டுவிட்டதாகவும் நீதிமன்றத்தில் அபராதத் தொகையை கட்டிவிடுமாறும் போக்குவரத்து காவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 

இதற்காக நீதிமன்றத்திற்கு சென்று அபராதத் தொகை செலுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சென்றபோது, போக்குவரத்து அலுவலர் மனோ, ஆட்டோ ஓட்டுநரிடம் பகிரங்கமாக 500 ரூபாய் லஞ்சம் கேட்டார். 200 ரூபாய் மட்டுமே இருப்பதாக ஆட்டோ ஓட்டுநர் கூறியதற்கு 500 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்கிறார். இந்த வாக்குவாதம் முற்றியநிலையில், நீதிமன்றத்தில் அபராதத் தொகையை செலுத்தி விடுவதாக ஆட்டோ ஓட்டுநர் கூற, வழக்கு விவரங்களை அளிக்க போக்குவரத்து அலுவலர் மறுத்து விடுகிறார்.

Related Posts: